Songtexte.com Drucklogo

Oru Pooncholai Songtext
von K. S. Chithra

Oru Pooncholai Songtext

ஆண்: ஹே... ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஹே... ஒரு பொன்மாலை தோள் சேருதே
பெண்: மலர்களின் முன்னும் பின்னும் பனித் துளி மின்னும் மின்னும்
ஆண்: பருவங்கள் துள்ளும் துள்ளும் பழகிட சொல்லும் சொல்லும்
ஆண்: முத்தம்
பெண்: தரும் சத்தம்
ஆண்: அதில். நித்தம் நித்தம் நெஞ்சம் மயங்குதே
பெண்: ஹே... ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஆண்: ஹே... ஒரு பொன்மாலை தோள் சேருதே
குழு: ஹா... ஆஅ... ஆஅ... ஆ
ஹா... ஆஅ... ஆஅ... ஆ
ஹா... ஆஅ... ஆஅ... ஆ
ஆண்: சிங்கார வெண்ணிலா மண் மீதிலே
சங்கீதம் பாடுதே உன் கண்ணிலே
பெண்: செந்தாடும் பொன் மயில் உன் தோளிலே
நின்றாட ஏங்குதே இந்நாளிலே
ஆண்: காதல் தேனாறு பாய்ந்தோடும் நேரம்
பெண்: ஆசைத் தேரேறி ஊர்கோலம் போகும்
ஆண்: அழகிய சித்திரமே மதன் கலை புத்தகமே
இளமை எழுதும் இனிய கதையை இரு உடல் அனுதினம் எழுதட்டுமே


பெண்: ஹே... ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஆண்: ஹே... ஒரு பொன்மாலை தோள் சேருதே
குழு: ...
பெண்: ஆகாய மேகமாய் நான் மாறியே
உன் மீது வெண்பனி நான் தூவவா
ஆண்: விண்மீனை பூக்களாய் நான் கிள்ளியே
உன் தோளில் மாலையாய் நான் போடவா
பெண்: கண்ணில் காணாத இன்பங்கள் யாவும்
மண்ணில் காண்பேனே உன்னாலே நானும்
பெண்: கரும்பினில் வில்லெடுத்து அரும்பினில் அம்பெடுத்து
உருவம் இழந்த ஒருவன் எனது உருகிடும் இதயத்தை துளைப்பதும் ஏன்
ஆண்: ஹே... ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஹே... ஒரு பொன்மாலை தோள் சேருதே
பெண்: மலர்களின் முன்னும் பின்னும் பனித் துளி மின்னும் மின்னும்
ஆண்: பருவங்கள் துள்ளும் துள்ளும் பழகிட சொல்லும் சொல்லும்
ஆண்: முத்தம்
பெண்: தரும் சத்தம்
ஆண்: அதில். நித்தம் நித்தம் நெஞ்சம் மயங்குதே
பெண்: ஹே... ஒரு பூஞ்சோலை ஆளானதே
ஆண்: ஹே... ஒரு பொன்மாலை தோள் சேருதே
குழு: ஹா... ஆஅ... ஆஅ... ஆ
ஹா... ஆஅ... ஆஅ... ஆ
ஹா... ஆஅ... ஆஅ... ஆ

Songtext kommentieren

Log dich ein um einen Eintrag zu schreiben.
Schreibe den ersten Kommentar!

Beliebte Songtexte
von K. S. Chithra

Fans

»Oru Pooncholai« gefällt bisher niemandem.